ஐரோப்பா செய்தி

போர் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஸ்வீடன் மற்றும் உக்ரைன்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 150 க்ரிபென் (Gripen) போர் விமானங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் ஸ்வீடன் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் (Ulf Kristersen) தெரிவித்துள்ளார்.

தெற்கு ஸ்வீடனில் உள்ள லிங்கோபிங்கில் (Linköping) பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் ஜனாதிபதி மற்றும் ஸ்வீடன் பிரதமர் கூடியிருந்த நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்திற்கு பிறகு JAS 39 க்ரிபென் போர் விமானம், குளோபல்ஐ (GlobalEye) கண்காணிப்பு விமானம், ஏவுகணை அமைப்புகள், டாங்க் எதிர்ப்பு காலாட்படை (anti-tank infantry) ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களை தயாரித்த சாப் (SAABb.ST) நிறுவனத்தை உக்ரைன் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

“இன்று முதல் எதிர்காலத்தில் உக்ரைனுக்கு அதிக அளவு கிரிபென் போர் விமானங்களை வழங்குவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என கிறிஸ்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், “க்ரிபென்ஸை உக்ரைனுக்குப் பெறுவதற்கான பணிகளை நாங்கள் தொடங்கியுள்ளோம், மேலும் எதிர்கால ஒப்பந்தம் இதுபோன்ற 100 ஜெட் விமானங்களை வாங்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Zelensky) குறிப்பிட்டுளளார்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி