கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த வரணி மத்திய கல்லூரி மாணவி சுவர்க்கா
யாழ் மாவட்டத்தில் கலை பிரிவில் வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா முதலிடம் பெற்றுள்ளார்.
க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் மாலை வெளியானது.
இந்த நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ,வரணி மத்திய கல்லூரி மாணவி இராசரத்தினம் சுவர்க்கா 3ஏ சித்திகளை பெற்று கலை பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடத்தினை பெற்றுள்ளார்.
வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் கலை பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் வரணி மத்திய கல்லூரியில் 2 பேர் கலைப்பிரிவில் 3ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 39 times, 1 visits today)





