அரசியல் இலங்கை செய்தி

கஜேந்திரகுமாரை உடன் இடைநிறுத்துங்கள்: அர்ச்சுனா முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு gajendrakumar Ponnambalam எதிராக சபாநாயகரிடம் இன்று (7) முறைப்பாடு செய்துள்ளார் அர்ச்சுனா எம்.பி. Archuna.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.

ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பினார் அர்ச்சுனா எம்.பி.

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவர் இந்த முறைப்பாட்டை செய்திருந்தார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

“புற்றுநோயால் உயிரிழந்த எனது தாய் தொடர்பில் அநாகரீகமாக இழிவான வார்த்தை பிரயோகத்தை கஜேந்திரகுமார் எம்.பி. மேற்கொண்டிருந்தார்.

சாதாரண அடிதட்டு மக்கள்கூட பயன்படுத்தாத இழிவான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருந்தார்.

எனவே, நாடாளுமன்ற ஒழுக்காற்று தொடர்பான குழுவில் இடம்பெறுவதற்கு கஜேந்திரகுமார் எம்.பிக்கு தகுதி உள்ளதா?

நாடாளுமன்றத்தில் எனக்கு அருகில் அமர்ந்திருக்கும் கஜேந்திரகுமாரை வேறொரு இடத்துக்கு மாற்று மாறு கோருகின்றேன்.

இது தொடர்பான விசாரணை நடக்கும்வரை நாடாளுமன்ற ஒழுக்காற்று மற்றும் சிறப்புரிமை குழுக்களில் இருந்து அவரை இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார் அர்ச்சுனா எம்.பி.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!