இலங்கை: குளிர்பான போத்தல்களின் மூடிக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

மருதங்கடவளையில் ஆன்லைன் விற்பனைக்காக குளிர்பான போத்தல்களின் மூடிக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கடவல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இணையவழி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர் வசம் இருந்த 104 பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் தனது ஜாக்கெட் மற்றும் குளிர்பான போத்தல்களுக்குள் சாதுரியமாக போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 5.25 கிராம் எடையுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
(Visited 40 times, 1 visits today)