ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது!
திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜுனைதீன் நஸ்லீம் (43வயது) எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2021 ஏப்ரல் மாதம் 25ம் திகதி ஹெரோயின் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை சிறைச்சாலையில் 53 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் 2025 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் விடுதலை செய்யப்பட்டார்.
இருந்த போதிலும் விடுதலை செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் தொடர்பில் மீண்டும் போதைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொதுமக்களால் பொலிஸ் நிலையத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இவர் தங்கி இருந்த வீட்டை திடீரென சோதனை இட்டபோது இவரிடமிருந்து ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ காவல்துறையினர் தெரிவித்தனர்.




