சதம் அடித்த சூர்யகுமார் – மும்பை அணி 218 ஓட்டங்கள் குவிப்பு
ஐபிஎல் கிரிகெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் ஷர்மா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது.
துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 20 பந்துகளில் 31 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா 18 பந்துகளில் 29 ரன்களை குவித்தார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 20-வது ஓவரின் கடைசி பந்தில் சதம் அடித்தார். இவர் 49 பந்துகளில் 103 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இவருடன் ஆடிய வதெரா 7 பந்துகளில் 15 ரன்களை மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின் விஷ்னு வினோத் 20 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 218 ரன்களை சேர்த்துள்ளது.
குஜராத் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.