ஜெர்மனியில் துப்புரவு பணியாளரின் உதவியுடன் நடந்த அறுவைச் சிகிச்சை – மருத்துவரின் நிலை
ஜெர்மனியில் கால்விரலை வெட்டி எடுக்கும் அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவமனையின் துப்புரவாளர் ஒருவர் உதவிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
அவரை பயன்படுத்திய மருத்துவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் சம்பவம் 2020ஆம் ஆண்டு மெயின்ஸ் (Mainz) பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்ததாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
விளம்பரம்
ஆனால் அது குறித்த விவரம் நேற்று முன்தினம் தான் வெளியானது. எப்படியிருப்பினும் இந்த நடவடிக்கையால் நோயாளிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
தகுதிபெற்ற உதவியாளர் யாரும் இல்லை என்றபோதும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர் தவறாய் முடிவெடுத்ததாக மருத்துவமனையின் தலைமை நிர்வாகி கூறினார்.
நோயாளியின் காலைப் பிடித்துக்கொள்ளவும் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கருவிகளை எடுத்துக்கொடுக்கவும் அந்தத் துப்புரவாளர் உதவியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகி அறுவைச் சிகிச்சை அறையில் துப்புரவாளரைக் கண்டபோது என்ன நடந்தது என்பது தெரியவந்தது