செய்தி

காவிரி வழக்கு! உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

காவிரியில் நாள் ஒன்றுக்கு 24,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரிய தமிழகத்தின் மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் இந்த விவகாரத்தில் எந்த நிபுணத்துவமும் இல்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், கர்நாடகா எவ்வளவு விடுவிக்கிறது என்பது குறித்து அறிக்கை கேட்க விரும்புகிறது.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் மாதம் 53 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு 15 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டது.

இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையமோ வினாடிக்கு 10,000 கன அடி நீரை மட்டுமே தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டது.

இதனையடுத்து தமிழ்நாட்டுக்கான உரிய காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசின் இந்த மனுவை நீதிபதி கவாய் தலைமையிலான புதிய பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த காவிரி வழக்கு விசாரணை நாளை நீதிபதி கவாய் பெஞ்ச் முன்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் இன்று காவிரி வழக்கில் கர்நாடகா அரசு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழ்நாடு அரசு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடிநீரை கோரியிருக்கிறது.

கர்நாடகாவில் வறட்சி நிலவும் நிலையில் இவ்வளவு நீரை திறந்துவிட முடியாது. ஆகையால் தமிழ்நாடு அரசு மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா பாஜக போராட்டத்தை தொடங்கி வைத்தது. இதனையடுத்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மேலும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டி இருந்தது.

பின்னர் நேற்று கர்நாடகா அரசு, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் காவிரி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று, தமிழ்நாடு அரசின் மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கர்நாடகா வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, காவிரி நீர் கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது கர்நாடகா அரசு தமது தரப்பு வாதத்தை முன்வைக்கும் என்றார்.

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி