ரஷ்ய எதிர்கட்சி தலைவரை 13 ஆவது நாளாக தேடி வரும் ஆதரவாளர்கள்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இன்று (18.12) வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் அவர் மாயமாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை 13வது நாளாகத் தேடி வருவதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்தனர். நவல்னிக்கு பல விசாரணைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில நவால்னி நேரில் அல்லது வீடியோ இணைப்பு மூலம் பங்கேற்காதமையால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் தெரிவித்துள்ளார்.
47 வயதான Navalny, டிசம்பர் 6க்குப் பிறகு அவருடனான தொடர்பை அவரது வழக்கறிஞர்கள் இழந்ததால், அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை தொடர்ச்சியாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் நவல்னியின் ஆதரவாளர்கள் ரஷ்யர்களை தேர்தலை புறக்கணிக்க அல்லது மற்றொரு வேட்பாளருக்கு வாக்களிக்க ஊக்குவிக்க ஒரு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.