நீரில் மூழ்கிய பிரித்தானிய சரக்கு கப்பல் : 22 பேர் மாயம்!
பிரிட்டிஸ் கடற்படைக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று வட கடலில் மூழ்கியதில் பலர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தேடுவதற்கான நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Polesie என்ற பஹாமியன் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலானது செவ்வாய்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதாக ஜெர்மனியின் கடல்சார் அவசரநிலைகளுக்கான மத்திய கட்டளையின் செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி தி டெலிகிராப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜேர்மனியின் ஹெல்கோலாண்ட் தீவில் இருந்து தென்மேற்கே 12 கடல் மைல் (22 கிலோமீட்டர்) தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலேசி கப்பல் நீரில் மூழ்கியபோது கப்பலில் 22 பேர் இருந்ததாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.





