பல நாடுகளில் தற்கொலை தாக்குதல் திட்டம் – இஸ்லாமிய அரசு குழுவின் தலைவர் கைது!
துருக்கி மற்றும் பிற இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிய அரசு குழுவின் மூத்த உறுப்பினரான மெஹ்மத் கோரனை ( Mehmet Goren) கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துருக்கியின் அரச செய்தி நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
மெஹ்மத் கோரன் ஒரு இரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கை எப்போது நடந்தது அல்லது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இதில் ஈடுபட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
குறித்த நபருக்கு துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐரோப்பாவில் தற்கொலை குண்டுவெடிப்புகளை நடத்தும் பணி வழங்கப்பட்டதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





