அமெரிக்காவில் திடீரென மாயமான சிறுவன் – பனியைச் சாப்பிட்டு தப்பிய அதிசயம்
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் 8 வயதுச் சிறுவன் வெறும் பனியைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார்.
Nante Niemi எனும் அந்தச் சிறுவன் கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் மாநிலப் பூங்காவிலுள்ள ‘Porcupine Mountains’ பகுதியில் முகாமிடச் சென்றபோது காணாமல்போனார்.
விறகுகளைச் சேகரிக்கப் போனபோது அவர் காணாமல்போனதாகவும் அவரைத் தேடும் முயற்சியில் 150 பேர் களமிறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கடந்த திங்கட்கிழமை முகாமில் இருந்து 2 மைல் தூரத்தில் மரக்கட்டை ஒன்றின் அடியிலிருந்து மீட்கப்பட்டதாக மாநில பொலிஸார் தெரிவித்தனர். சிறுவனின் உடல்நிலையும் சீராக இருந்தது.
உடலை வறட்சியின்றி வைத்துக்கொள்ள தாம் 2 நாள்களாகச் சுத்தமான பனியைச் சாப்பிட்டதாகச் சிறுவன் கூறியுள்ளார். சிறுவன் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மகனைக் கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் சிறுவனின் தாய் நன்றி தெரிவித்தார்.