இலங்கையில் திடீர் மண்சரிவு – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்

பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்றிரவு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மண்சரிவினால் பகுதியளவில் சேதமடைந்த இரண்டு வீடுகளிலிருந்த ஒன்பது பேர் அருகிலுள்ள தங்குமிடம் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மண்சரிவில் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் காணாமல்போனோரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
(Visited 10 times, 1 visits today)