உலகம் முழுவதும் iPhone விற்பனையில் திடீர் சரிவு
ஐரோப்பாவைத் தவிற மற்ற எல்லாச் சந்தைகளிலும் Apple நிறுவனத்தின் iPhone கையடக்க தொலைபேசிகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் அவற்றுக்கான தேவை சுமார் 10 சதீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
நிறுவனத்தின் வருவாயும் 4 சதவீதம் சரிந்து 90.8 பில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது. எனினும் Apple நிறுவனத்தின் பங்கு விலைகள் பாதிக்கப்படவில்லை. பங்கு விலைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டன.
Apple நிறுவனம் புதிய கருவிகள் வெளியிடுவதிலும், செயற்கை நுண்ணறிவிலும் முதலீடு செய்து வருகின்றது.
அதற்கமைய, எதிர்வரும் மாதங்களில் விற்பனை சூடுபிடிக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.
(Visited 7 times, 1 visits today)