உலகளவில் தேனீக்களின் எண்ணிக்கையில் திடீர் சரிவு – பிரித்தானியா எடுத்த நடவடிக்கை
உலகளவில் தேனீக்கள் எண்ணிக்கை சரிவை தடுக்க புதிய உணவுப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில், தேனீக்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவைத் தடுப்பதற்கு உதவும் வகையில், புதிய உணவுப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
பயிர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் காரணமாக உள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் தீவிர விவசாயம் போன்றவற்றால் பூக்களின் பன்முகத்தன்மை குறைந்து தேனீக்களுக்கு தேவையான உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தாவர மகரந்தத்தில் காணப்படும் அத்தியாவசிய கலவைகளைப் போன்ற துணை உணவு உருவாக்கப்பட்டுள்ளது.
இது தேனீக்கள் இனப்பெருக்கத்தை கணிசமாக அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
(Visited 7 times, 1 visits today)





