லண்டனில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் : பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டில் லண்டனில் கொலை குற்றச் செயல்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த ஆண்டில் 97 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலைநகரின் தனிநபர் கொலை விகிதம், 100,000 குடியிருப்பாளர்களுக்கு 1.1 ஆக உள்ளது எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதிகரித்த கைதுகள், நேரடி முக அங்கீகாரம் போன்ற புதுமையான தொழில்நுட்பம் மற்றும் ஆபத்தான குற்றவாளிகளுக்கு எதிரான இலக்கு நடவடிக்கை உள்ளிட்ட “இடைவிடாத உழைப்பு” ஆகியவை கொலை குற்றங்கள் வீழ்ச்சியடைவதற்கு பங்களித்துள்ளதாக காவல்துறை அதிகாரி சர் மார்க் ரோவ்லி (Sir Mark Rowley) குறிப்பிட்டுள்ளார்.





