சூடான் ஜன்ஜாவீத் (Janjaweed militia) போராளிக் குழுவின் தலைவருக்கு சிறை தண்டனை!
சூடான் ஜன்ஜாவீத் (Janjaweed militia) போராளிக் குழுவின் தலைவருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளனர்.
2003-2004 ஆம் ஆண்டில் வெகுஜன மரணதண்டனைகளை நிறைவேற்ற உத்தரவிட்டது மற்றும் இரண்டு கைதிகளை கோடரியால் அடித்துக் கொன்றது உள்ளிட்ட 27 போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அலி முஹம்மது அலி அப்துல்-ரஹ்மானுக்கு ( Ali Muhammad Ali Abd–Al-Rahman) ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரினர்.
மேற்படி குற்றங்களை அவர் தெரிந்தே, வேண்டுமென்றே செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை நீதிமன்றம் தண்டனை விதித்தது. இருப்பினும் அலி அப்துல் ரஹ்மான் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் தொடர்பில் எவ்வித எதிர்வினையும் காட்டவில்லை.
இதற்கமைய குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எட்டு ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் டார்பூரில் நடந்த பேரழிவு மோதலில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





