சூடானால் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்!

சூடானின் போரிடும் தரப்புகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படாவிட்டால் ஐரோப்பா புதிய சிக்கல்களை சமாளிக்க வேண்டி வரும் என அகதிகள் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாவிட்டால் அங்குள்ள சூடானிய அகதிகள் ஐரோப்பா நோக்கி நகர்வார்கள் என்றும், இதனால் புதிய சிக்கல்கள் உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஐரோப்பியர்கள் எப்போதும் மத்திய தரைக்கடல் வழியாக வருபவர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள் என்றும் லிபியா, துனிசியா மற்றும் மத்தியதரைக் கடல் வழியாக மக்கள் நகர்வதைக் காண்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்ததாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 22 times, 1 visits today)