டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் காணாமல்போன சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி!

டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து செல்லும் நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக்கில் காணாமல்போயுள்ளது
நீர்மூழ்கி காணாமல்போயுள்ள நிலையில் தேடுதல் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அமெரிக்க கடலோரக் காவல்படையின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக ஏஜென்சி மற்றும் சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கியில் எவராவது இருந்தார்களா எத்தனைபேர் பயணம் செய்தார்கள் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.
சிறியநீர்மூழ்கிகள் சுற்றுலாப்பயணிகளை கப்பலின் சிதைவை பார்ப்பதற்கு அழைத்துச்செல்வது வழமை.
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பல்.
அமெரிக்காவின் சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க்கிற்கு சென்ற டைட்டானிக்கின் முதல் பயணம் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.