இந்தியா செய்தி

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 4 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

கடைசியாக 11ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதி அறிவிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரர்கள் வரும் 19ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்வார்கள் என்று இஸ்ரோ அறிவித்தது. .

இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி