இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

பாதுகாப்பாக கலிபோர்னியா கடற்கரையில் தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்தார்.

தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இதையடுத்து டிராகன் விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரப்பட்டனர்.

சிறிய படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்படும் அவர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடக்க உள்ளன. சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று பத்திரமாக திரும்பிய முதல் இந்தியராக சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளார்.

சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர். டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை அவரது பெற்றோர் பகிர்ந்து கொண்டனர்.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி