இந்தியா செய்தி

கோவையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய 98ம் ஆண்டு பயின்ற மாணவர்கள்

கோவை மன்ப உல் உலூம் பள்ளியில் கடந்த 98 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

கோவை கோட்டை மேடு பகுதியில் பழமை வாய்ந்த பள்ளியாக மன்ப உல் உலூம் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னால் 98 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி போத்தனூர் சாலையில் உள்ள ராசி மகால் அரங்கில் நடைபெற்றது.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் சந்தித்து கட்டித்தழுவி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவர்கள் மேடையி்ல் ஏறி, தங்களது வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அசைபோட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பழைய விளையாட்டுகளை நினைவு படுத்தும் விதமாக பம்பரம்,எறிபந்து,காற்று இழுப்பது,போன்ற விளையாட்டுகளை காட்சி படுத்தியும்,மாணவர்களே விளையாடியும் மகிழ்ந்தனர்.

அதே போல நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பழைய நினைவுகளை நினைவு படுத்தும் விதமாக, பொரி உருண்டை, சீடை, நெல்லிக்காய், கமரக்கட்டு, தேன் மிட்டாய், கடலை பருப்பி, ஆரஞ்சு மிட்டாய், சக்கர மிட்டாய், தேன் மிட்டாய் போன்றவற்றை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியை 98 ஆம் ஆண்டு மாணவர்கள் கலீல் ரஹ்மான்,ஏ.எஸ்.ஏ.எல்,அபு,.பைசல் ரஹ்மான்,அப்பாஸ்,அபு,யாசர்,அப்துல்லா,சாதிக்,ஜஹாங்கீ்ர்,ரஹமத்துல்லா,யாசர்,மன்சூர்,நிசார்,ஷாஜஹான்,ரபீக்,அன்சர் அலி,முஸ்தபா,ஆகியோர் உட்பட பல நண்பர்கள் இணைந்து ஒருங்கிணைத்தனர்

(Visited 12 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி