பிரான்ஸ் உயர்நிலை பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்!
வடக்கு பிரான்சில் உள்ள அராஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உள்ள பாடசாலை மாணவர்கள் இன்று (16.10) பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.
இதன்காரணமாக லைசி கம்பெட்டா உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் முற்றத்தில் கூடினர், சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அத்துடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமிய பயங்கரவாதம் என இந்த தாக்குதல் குறித்து கண்டம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டது.
(Visited 8 times, 1 visits today)