தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்த மாணவி: பெற்றோர் வெளியிட்ட உருக்கமான அறிக்கை
அண்மையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர், சம்பவம் தொடர்பில் ஊடகங்களால் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரு அறிக்கையை வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், பல ஊடகங்கள் ஊடக நெறிமுறைகளை மீறியதை எடுத்துக்காட்டினர், இதில் மைனர் ஒருவரின் பெயர் மற்றும் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பம் தொடர்பான பிற தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டன.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் தங்கள் மகளின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.
” அல்டேர் கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரை மாயத்துக் கொண்ட தனது இரு நண்பர்கள் குறித்து தனது மகள் மிகவும் வருத்தமடைந்திருந்தாகவும் அவரை மீட்டு சரியான பாதைக்கு கொண்டு வர நிபுணர்களின் உதவியைப் பெற்றதாகவும் அது தொடர்பான அறிக்கையில் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மாணவி குணமடைந்து வரும் வேளையில் தனது பாடசாலையில் சில ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பரப்பிய பொய்யான வதந்திகளினால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆல்டேர் கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட தனது இரண்டு நண்பர்கள் பற்றி தங்கள் மகளுக்கு ஏற்கனவே தெரியும் என்று ஆசிரியர்களும் சில பெற்றோரும் செய்தி பரப்பியதாகவும் உயிரழந்த மாணவியின் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் மகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், மற்ற மாணவர்களை மகளிடம் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் சில பெற்றோர்கள் குற்றம்சாட்டியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான வதந்திகளாலும், பெற்றோரின் அழுத்தங்களாலும் தனது மகள் மிகவும் அடக்குமுறையுடன் பொழுதைக் கழித்ததாகவும், இதன் காரணமாகவே அவரை வேறு பாடசாலைக்கு மாற்ற நினைத்ததாகவும் அது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மகளின் மீதான அழுத்தங்கள் அவளால் தாங்க முடியாத நிலையை எட்டிய நிலையில் அந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது”