பங்களாதேஷில் மீண்டும் வெடித்த மாணவர் போராட்டம்!
 
																																		பங்களாதேஷ் மாணவர் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி பதவி விலகக் கோரி முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும் மாணவர்கள் முயற்சித்துள்ளனர்.
எனினும் அந்த முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.
வங்கதேச அரசு கொண்டு வந்த வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இழந்ததுடன் முடிவுக்கு வந்தது.
போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, அன்றிலிருந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்தை கூட முற்றுகையிட்ட மாணவர் போராட்டக்காரர்கள் நாட்டில் புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து மாணவர் தலைவர்களின் பங்களிப்புடன் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசை நியமிக்கப்பட்டது.
அதன் பின்னர், நாட்டில் அன்றாட நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பிய போதிலும், நாட்டில் மீண்டும் பாரிய போராட்டங்கள் தொடர ஆரம்பித்துள்ளன.
 
        



 
                         
                            
