இலங்கை: பாடசாலை கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த மாணவிக்கு நேர்ந்த கதி
சர்வதேச பாடசாலையொன்றின் தரம் 08 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி புதன்கிழமை (ஜனவரி 15) பாடசாலையின் கட்டிடமொன்றின் 05 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரச செய்தித்தாள் தினமினவின் படி , வத்தளையில் வசிக்கும் மாணவி, கீழே ஒரு மாடியில் இணைக்கப்பட்ட ஃபைபர் கூரையில் விழுந்ததால், அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வத்தளை பொலிஸார், தவறி விழுந்ததில் குறித்த மாணவிக்கு காணக்கூடிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
இந்த மாணவி ஐந்தாவது மாடியில் இருந்து குதித்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த வத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 1 visits today)