மொனராகலையில் கேள்வி கேட்ட ஆசிரியரை தாக்கிய மாணவன்!
மொனராகலை நகரத்தில் உள்ள ஒரு முன்னணி பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் அவ் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் பாடசாலைக்கு தொலைபேசி, பவர் பேங்க் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் தொழில்நுட்ப பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியர், மாணவரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்போது குறித்த மாணவன் ஆசிரியரை தாக்கியதாகவும், அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர் மொனராகலையில் உள்ள சிரிகலவில் வசிப்பவர் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(Visited 5 times, 1 visits today)





