ஆஸ்திரேலியாவில் பலத்த காற்று – கடுமையாக பாதிக்கப்பட்ட விமான சேவை
 
																																		ஆஸ்திரேலியாவில் பலத்த காற்று காரணமாக, சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது, செயல்பாடுகள் ஒரு ஓடுபாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கிட்டத்தட்ட 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலை இன்று முழுவதும் தொடரலாம் மற்றும் தாமதங்கள் மற்றும் ரத்துகளை எதிர்பார்க்கலாம்.
எனவே, பயணி தனது விமானத்தை உறுதிப்படுத்திய பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்படுகிறார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சில இடங்களில் மணிக்கு 100 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, விக்டோரியாவின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் கனமழையுடன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(Bellbird Corner, Maffra, Mewburn Park, Newry, Riverslea, Tinamba, and Tinamba West)
அந்த பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாநில பேரிடர் மீட்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 
        



 
                         
                            
