பிரேசிலில் கடுமையான சூறாவளி : 13 பேர் பலி!
தெற்கு பிரேசிலில் வீசிய வெப்பமண்டல சூறாவளிக் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகரான போர்டோ அலெக்ரே உட்பட ரியோ கிராண்டே டோ சுல் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, மணிக்கு 101.9 கிலோமீட்டர் (60 மைல்) வரை காற்றின் வேகம் பதிவுசெய்யப்பட்ட நிலையில், டிராமண்டாய் நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)