பிலிப்பைன்ஸில் வலுவான நிலநடுக்கம் பதிவு!
பிலிப்பைன்ஸில் ஒரு வலுவான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நகரமான பாகுலின் ( Baculin ) இருந்து 68 கிலோமீட்டர் கிழக்கே 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.





