அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் விசா நடைமுறை!! இலங்கை மாணவர்களும் பாதிப்பு
குடியேறிகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டதை அடுத்து சர்வதேச மாணவர்களுக்கான விசா நடைமுறையைக் அவுஸ்திரேலியா அரசாங்கம் கடுமையாக்கியுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (மார்ச் 23) முதல், மாணவர் விசா, பட்டதாரி விசா ஆகிய பிரிவுகளுக்கான ஆங்கிலமொழித் திறன் தேவை அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் அனைத்துலக மாணவர்களைச் சேர்ப்பதற்கான அவற்றின் உரிமத்தை ரத்து செய்யப்படும் எனவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் குடியேற்ற நடைமுறையைச் சீராக்க அரசாங்கத்தின் கடப்பாட்டைக் காட்டும் இந்த நடவடிக்கைகள் தொடருமென்று உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து அதிகளவான மாணவர்கள் அவுஸ்ரேலியாவில் பல்வேறு துறைகளில் மாணவர் விசாவில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் கல்வி செயல்பாடுகளின் பின்னர் நிரந்தர விசாவை இவர்கள் அங்கு பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமைகள் ஏற்படடுள்ளன.
இதனால் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தில் சில கரிசனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வெளிநாட்டு மாணவர்கள் கோரிக்கை விடுக்க தயாராகி வருகின்றனர்.
இதேவேளை, எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவில் சென்று கல்வி நடவடிக்கைகளை தொடர பல தடைகளை தாண்டி செல்ல சூழல் ஏற்பட்டுள்ளதாக தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.