ஜெர்மனியில் பொது போக்குவரத்து தொடர்பில் கடுமையான சட்டம்
ஜெர்மனியில் பொது போக்குவரத்து தொடர்பில் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்துவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்தில் பயணசீட்டு இன்றி பயணிப்போருக்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.
பயண சீட்டு இன்றி பயணிப்போருக்கு எதிராக 60 யூரோ அபாரம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெருமளவானோர் கட்டுப்பாடுகளை மீறி பயண சீட்டுகள் இன்றி பயணிக்கின்றனர். எனினும் அபாரம் விதிக்கப்பட்டாலும் அதனை செலுத்த தவறுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இதுவரை சுமார் ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோர் அபாரம் செலுத்த முடியாத நிலையில் சிறையில் உள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த செயற்பாட்டுக்கு சில மனித உரிமை அமைப்புகள் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பயண சீட்டு இன்றி பயணிப்போரை சிறையில் அடைக்கும் நடவடிக்கையை நிறுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.