இலங்கை சபாநாயகருக்கு பலப்பரீட்சை!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெகுவிரைவில் கையளிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது . அது முடிவடைந்த பின்னர் தர்க்க ரீதியாக பிரேரணை முன்வைக்கப்படும்.” எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் நிராகரித்தமை உட்பட மேலும் சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன், தற்போதைய சபாநாயகர் பக்கச்சார்பாக செயற்படுகின்றார் எனவும் அஜித் பி பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.