அமெரிக்காவில் ஒடும் ரயிலில் கழுத்தை நெரித்து கொலை !
அமெரிக்காவில் உள்ள சுரங்கப் பாதை ரயிலில் மைக்கேல் ஜாக்சன் போன்ற தோற்றம் கொண்ட நபர், கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த ஜோர்டன் நேலி(30) என்பவர், மைக்கேல் ஜாக்சன் போன்று நடனமாடுவதோடு அவர் போலவே தோற்றம் கொண்டவர் ஆவார்.
வறுமையில் வாடிய அவர் தங்குவதற்கு வீடில்லாமல் சாலையோரங்களில் தங்கி வாழ்ந்துள்ளார். கடந்த மே 1ஆம் திகதி மன்ஹாட்டன் அருகே சுரங்கப் பாதை ரயிலில் பயணம் செய்த அவர் தனது வறுமையை எண்ணி புலம்பியுள்ளார்.மேலும் தன்னிடம் பணமில்லை என்றும், சாப்பிட்டு நாளானதாகவும் கூறி அழுது கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கிருந்த அமெரிக்க கடற்படை வீரர் அவரை கட்டுப்படுத்த முயன்றுள்ளார்.
இந்நிலையில் அவர் உயிரிழக்கும் வரை கழுத்தை நெறித்து பிடித்தது ரயில்வே cctvயில் பதிவாகியுள்ளது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ சிகிச்சை எடுத்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் கடற்படை வீரர் அவரது கழுத்தை நெறிக்கும் அவர் தன்னை மீட்டு கொள்ள போராடியுள்ளார்.உடனே அங்கிருந்த மற்றொரு பயணி அவரது கைகளை பிடித்து கொள்ள, இன்னொருவர் நேலியின் மார்பு பகுதியை அழுத்தி பிடித்துள்ளனர்.
முதலில் நேலி உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கணித்த பொலிஸார், பின்னர் cctv காணொளியின் மூலம் குற்றவாளி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.இதனிடையே ஜோர்டன் நேலியின் உயிரிழந்ததை அடுத்து, வீடற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, அமெரிக்க மக்கள் ரயில்நிலையங்கள் மற்றும் விதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தின் போது வீடியோவை பதிவு செய்த ஜூன் ஆல்பர்டோ “நேலி தன் வறுமையை நினைத்து மிகவும் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே அழுதார்” என கூறியுள்ளார்.மேலும் நேலி யாரையும் தாக்கவில்லை என்றும், அவர் தன்னுடைய சட்டையை கழற்றி வீசியதால் ஆத்திரமடைந்த கடற்படை வீரர் இவ்வாறு செய்தார் என்றும் ஜீன் ஆல்பர்டோ பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.