அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் சென்ற விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து பாரிஸுக்குச் சென்ற விமானத்தில் பெண் ஒருவரால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
Delta Air Lines விமானத்தில் பயணி ஒருவர் விமானச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தமையினால் பாதுகாப்பு பிரச்சினை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பெண் 2 முறை நடத்தப்படும் விமானச் சீட்டுச் சோதனையிலும் தப்பியிருக்கிறார்.
எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை Delta விமான நிறுவனமும் அமெரிக்கப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையமும் விசாரித்து வருகின்றன.
பிரெஞ்சுக் பொலிஸார் அந்தப் பயணியை விமானத்தில் கைதுசெய்தனர். அதன் பிறகே விமானத்தில் இருந்த மற்றப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
விமானம் புறப்படுவதற்கு முன்பு அந்தப் பயணி சோதனை செய்யப்பட்டதாகவும் அவரிடம் தடைசெய்யப்பட்ட பொருள்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.
(Visited 6 times, 1 visits today)