சீனாவில் புயல் எச்சரிக்கை – முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்ட மக்கள்!

சீனா பலத்த மழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல புயல் பொடுல் பல தெற்கு மாகாணங்களில் கரையைக் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புஜியன், குவாங்டாங் மற்றும் குவாங்சி மாகாணங்கள் ஆயத்த முயற்சிகளின் மையமாக இருந்தன, ஆனால் புதன்கிழமை தைவானைக் கடந்து சென்றபோது புயலின் வலிமை இழந்ததால் எச்சரிக்கைகள் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தெற்கு சீனாவின் கடலோரப் பகுதிகளிலிருந்து சுமார் 15,000 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)