09 மைல் வேகத்தில் நகரும் புயல் : புளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்!
மில்டன் சூறாவளியின் தாக்கத்தால் புளோரிடா மாகாணம் தத்தளித்து வருவதால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மெக்சிகோ வளைகுடா முழுவதும் கடந்த 04 நாட்களாக புயல் காற்று வீசி வருகிறது. இது முன்னதாக ஏற்பட்ட ஹெலன் சூறாவளியை விட சக்திவாய்ந்ததாக இருப்பதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
155 மைல் காற்றானது மாநிலத்தை நோக்கி 9 மைல் வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னறிவிப்பாளர்கள் இது இன்னும் “புளோரிடாவிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாக” இருப்பதாகவும் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து வெளியேறிவருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பலர் திரண்டிருப்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.