பிரித்தானியாவை தாக்கிய இங்க்ரிட் புயல் : 26 வெள்ள எச்சரிக்கைகள் அமுலில்!
இங்க்ரிட் (Ingrid) புயல் காரணமாக பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு நாளை (24.01) வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு, சாலை போக்குவரத்து, ரயில், விமானம் மற்றும் படகு சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் (Scotland) ஏற்கனவே சாலைகள் மூடப்பட்டுள்ளன. பெர்த் (Perth) மற்றும் கின்கிராஸ் (Kincross) போன்ற பகுதிகளில் ரயில் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்டிஷ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் நாடு முழுவதும் 26 வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




