சீனாவை தொடர்ந்து வியட்நாமை உலுக்கிய புயல் – பலர் பலி
வியட்நாமை புயல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர்.
தென் சீனாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய யாகி புயல், வியட்நாமை தாக்கியுள்ளது.
ஆயிரக்கணக்கான மரங்களும், ஏராளமான மின்கம்பங்களும் முறிந்து வீழ்ந்தன.
வடக்கு வியட்நாமில் மின்சாரம் தடை பட்டதால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக வியட்நாம் அரசு தெரிவித்தது.
நெல், கரும்பு போன்ற ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விளைநிலங்களும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது.
வணிக நிறுவனங்களின் விளம்பர போர்டுகள், பெயர் பலகைகளும் சேதம் அடைந்தன.





