ஹாங்கொங்கை தாக்கும் புயல் – 36 மணிநேரம் மூடப்பட்ட விமான நிலையம்!
குவாண்டாஸ் ஏர்வேஸ் நாளை (23.09) முதல் அனைத்து பயணிகள் விமானங்களையும் 36 மணி நேரம் நிறுத்தி வைக்கும் என்று அறிவித்துள்ளது.
கடுமையான புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிவிப்பிற்கு அமைய நாளைய தினம் இரவு 8 மணி முதல் செப்டம்பர் 25 ஆம் திகதி காலை 8 மணி வரை ஹாங்காங்கின் விமான நிலையம் மூடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் தீர்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ரகாசா என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளியானது அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரத்தை தாக்கும் எனக் கூறப்படுகிறது. ஆகவே மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைப்பதாகவும் கூறப்படுகிறது.
நகரத்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான கேத்தே பசிபிக் ஏர்வேஸ் ஞாயிற்றுக்கிழமை புயலின் சாத்தியமான தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அதன் விமானங்கள் தற்போது பாதிக்கப்படவில்லை என்றாலும், நிலைமை உருவாகும்போது அது மாறக்கூடும் என்றும் கூறியுள்ளது.





