இங்கிலாந்தை தாக்கிய புயல் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கோரெட்டி (Goretti) புயல் காரணமாக பிரித்தானியா முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்கில்லி (Scilly) தீவுகளில் உள்ள செயிண்ட் மேரி விமான நிலையத்தில் மணிக்கு 99 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தில் 40,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொலைபேசி வழியாக அவசர எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படி புயல் காரணமாக ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் மற்றும் விமான சேவைகள் தாமதடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





