டார்ராக் புயல் : பிரித்தானியாவிற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
டார்ராக் புயல் நெருங்கி வருவதால் பிரித்தானியா முழுவதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவத்தின் நான்காவது பெயரிடப்பட்ட புயல் கரையை கடக்கும்போது 80 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், மழையுடனான வானிலை நிலவும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் மேற்கு கடற்கரை, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மிக மோசமான காற்று நாளை (07.12) முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிர், பொருட் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பயண தாமதங்கள், மின் துண்டிப்பு குறித்தும் எச்சரிக்கையைாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)