கிளாடியா (Claudia) புயல் – பிரித்தானியாவில் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்!
பிரித்தானியாவை உலுக்கிய கிளாடியா Claudia) புயலால் தெற்கு வேல்ஸின் (Wales) சில பகுதிகளில் பரவலான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நிறுவனம் ஏறக்குறைய 194 வெள்ள அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
சில பகுதிகளில் உயிராபத்துக்கள் ஏற்படும் எனவும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக ஸ்டாஃபோர்ட்ஷையரில் (Staffordshire) 50 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மென்செஸ்டரின் (Manchester) சில பகுதிகளில் வீடுகளின் மீதும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசரகால சேவைகள் துரித நடவடிக்கைகளை எடுத்துள்ள அதேவேளை மோன்மவுத் (Monmouth) பகுதியை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




