பிராம் புயல் எதிரொலி – பிரித்தானியாவின் பல பகுதிகளில் மின்துண்டிப்பு!
பிரித்தானியாவை தாக்கிய பிராம் புயல் காரணமாக பல வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு அயர்லாந்தின் பல பகுதிகளில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பல பகுதிகளுக்கும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த எச்சரிக்கைகள் நாளை வரை நீடிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிராம் புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 119 கிமீ (74 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக விமான சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும், மக்கள் பயண இடையூறுகளை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





