இங்கிலாந்தை தாக்கிய பெர்ட் புயல் : மூவர் பலி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

இங்கிலாந்தில் பெர்ட் புயல் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நகரங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்திற்கு ஒரே இரவில் 200 இற்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் உள்ளன.
அதே நேரத்தில் மழை மற்றும் காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை தெற்கு, வடகிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கு விடுக்கப்பட்டுள்ளன.
மிட்லாண்ட்ஸ், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் சவுத் வேல்ஸில் 4,000 வீடுகள் பாதிக்கப்பட்டதுடன், வடகிழக்கு, யார்க்ஷயர் மற்றும் வடக்கு லிங்கன்ஷையரில் 27,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 51 times, 1 visits today)