எம்.பிகளுக்கான வாகன அனுமதி சீட்டு நிறுத்தப்படுவது பழைய யோசனை!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பெருமை பேசுவதாகக் கூறிய இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சாணக, இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில் கொண்டுவரப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2020 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிச் சீட்டுகளை வழங்குவதை நிறுத்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்தாக தெரிவித்துள்ளார்.
இதன்படி 2020 இற்கு பிறகு எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனுமதிச் சீட்டுகளைப் பெறவில்லை என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற நிபுணர்கள் மட்டுமே வாகன அனுமதிச் சீட்டுகளைப் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
“அனுர குமார திசாநாயக்க, ஹரிணி அமரசூரிய மற்றும் விஜித ஹேரத் ஆகியோரிடம் 2020 இல் வாகன அனுமதிச் சீட்டுகளைப் பெற்றீர்களா என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன அனுமதிச் சீட்டுகளை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பெருமை பேசுகிறது. ஏற்கனவே நிறுத்தப்பட்டதால் அரசாங்கத்தால் நிறுத்த எதுவும் இல்லை,” என்று அவர் கூறினார்.




