கொழும்பு துறைமுக நகரில் உள்ள உணவகங்களை அகற்ற நடவடிக்கை!

2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கொழும்பு துறைமுக நகரில் உள்ள உணவகங்களை அகற்றவுள்ளதாக கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரமானது வெளிநாட்டு முதலீடுகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான ஹோட்டல்களை நடத்துவதன் சட்டபூர்வ தன்மை தொடர்பில் அரசாங்கத்தின் நிதிக்குழு எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு மேற்படி தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து உணவகங்களும் கொழும்பு துறைமுக நகர பொருளாதாரத்துடன் இணைந்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் கீழ் நடத்தப்படுவதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)