இலங்கை செய்தி

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டோருக்கு இலவச விசா, மனிதாபிமானப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமானப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட விதிகளைப் பின்பற்றி, அணிசேரா கொள்கையின் அடிப்படையில் கப்பல்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தீர்மானங்கள் மூலம் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதோ அல்லது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோ அரசாங்கத்தின் நோக்கமல்ல என அமைச்சர் கூறினார்.

உலகளாவிய ரீதியில் போர்ச் சூழல்கள் நிலவினாலும், அதன் மறைமுகத் தாக்கங்களுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பிற்கே அரசாங்கம் முதலிடம் வழங்கும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!