பிரித்தானியாவில் புலம்பெயர்தோர் தங்கள் குடும்பங்களை அழைத்து வருவதை மேலும் கடுமையாக்க நடவடிக்கை!

இங்கிலாந்துக்கு தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பங்களை அழைத்து வருவதற்கான விதிகளை கடுமையாக்குவது குறித்து உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் அறிவிக்க உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெஸ்ட்மின்ஸ்டருக்குத் திரும்பும்போது, குடும்ப உறுப்பினர்களுக்கான அளவுகோல்களை கடுமையான ஆங்கில மொழித் தரநிலைகள் மற்றும் போதுமான நிதியைப் பெறுதல் உட்பட பல வழிகளில் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் புகலிட மேல்முறையீட்டு முறைமையில் சீர்திருத்தங்களை கோடிட்டுக் காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தோருக்கு ஹோட்டல்களைப் பயன்படுத்துவது குறித்து பிரித்தானியா முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.
இதற்கிடையில் முன்மொழியப்பட்ட விதி மாற்றம் ஒரு “சிறிய மாற்றம்” என்றும், “எல்லை நெருக்கடியின்” அளவைப் பற்றி அரசாங்கம் “முழுமையான மறுப்பில்” இருப்பதாகவும் பழமைவாதிகள் தெரிவித்தனர்.