WhatsApp ஸ்பேம் குழுக்களில் சிக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள்
ஸ்பேம் செய்திகளின் தொல்லையில் இருந்து தப்ப வாட்ஸ்அப் செட்டிங்கை சரிசெய்தால் போதும். சிறிய பிரைவசி செட்டிங் மாற்றம் மூலம் விரும்பத்தகாத வாட்ஸ்அப் குரூப்களில் உங்கள் எண் சேர்க்கப்படுவதை தவிர்க்க முடியும்.
வாட்ஸ்அப்பில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று Privacy என்பதைத் தேர்வுசெய்யவும். அதில் Group என்பதை தேர்வு செய்து, பின் “Who Can Add Me to Groups?” என்பதை கிளிக் செய்யவும்.
இந்தப் பகுதியில் யார் யார் உங்ககளை வாட்ஸ்அப் குழுக்களில் இணைக்கலாம் என்பதை முடிவு செய்யலாம். இது Everyone என்று இருந்தால், அதை மாற்றி அமைக்கலாம்.
My Contacts, My Contacts Except, Nobody என்று மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். My Contacts என்பதைத் தேர்வு செய்தால் உங்கள் கான்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் மட்டும் குருப்களில் உங்களைச் சேர்க்க முடியும். My Contacts Excerpt என்பதைத் தேர்வு செய்தால் கான்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்களில் குறிப்பிட்ட நபர்கள் தவிர மற்றவர்கள் உங்களை வாட்ஸ்அப் குரூப்களில் சேர்க்கலாம்.
Nobody என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் யாரும் தாங்களாக உங்கள் எண்ணை எந்த வாட்ஸ்அப் குழுவிலும் சேர்க்க முடியாது. அதே நேரத்தில் சொந்த விரும்பத்தின் பேரில் நீங்களே எந்த குழுவிலும் சேர்ந்துகொள்ளும் வசதியும் இருக்கும்.